இது குறித்து அச்சங்கத்தில் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் கூறியதாவது, "தமிழ்நாடு ஆளுநர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். காலதாமதமாக அனுமதி வழங்கியுள்ளார். இருப்பினும் வரவேற்புக்குரியது.
தற்பொழுது ஒப்புதல் அளித்ததின் மூலம், மக்களிடமிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார். இது அரசிற்கும், எதிர்க்கட்சிகளுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளைக்கும் கிடைத்த வெற்றியாக அமைந்துள்ளது.
அரசு மாணவர் சேர்க்கையை உடனடியாகத் தொடங்கிட வேண்டும். தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும். அவர்களுக்கு எந்த நிபந்தனையுமின்றி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டியில்லா கடன் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வேளாண்மை, கால்நடை உள்ளிட்ட அனைத்து தொழிற் கல்லூரிகளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்தவும் உடனடியாக அவசரச் சட்டத்தை கொண்டுவர வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: மருத்துவ மாணவர்கள் கல்வி கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை!