இலங்கையில் நடைப்பெற்ற வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்களில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றனர். இதன் தொடர்பாக மாநில உளவுத்துறையினர் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவுனர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் அடிப்படையில் கேரளா மாநிலத்தை சேர்ந்த ரியாஸ் அபூபக்கர் என்பவரை உளவுத்துறையினர் கைது செய்தனர்.
தற்போது இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹசன் என்னும் நபர் இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு முன்பாக சென்னை மண்ணடிக்கு வந்து சென்றுள்ளதாகவும், இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் முதல் நாள் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பலியான ஹாசீமினுடன் நெருங்கிய தொடர்பில் அந்த நபர் இருந்ததாகவும் தேசிய புலனாய்வு பிரிவிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு உளவுத்துறை மண்ணடியில் ஹசன் யாரை சென்று சந்தித்தார், எந்தெந்த இடங்களுக்கு சென்றார் என்கின்ற கோணத்தில் அவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஹசன் இறந்து விட்டாரா அல்லது உயிருடன் உள்ளாரா என்கின்ற ஆதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.