ETV Bharat / state

சூரப்பா மீதான புகார்: அலுவலர்களிடம் அடுத்த வாரம் விசாரணை - சூரப்பா புகார் விவகராத்தில் தேவையான ஆதாரங்கள்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா புகார் விவகாரத்தில் தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், அடுத்த வாரம் முதல் அலுவலர்களை அழைத்து விசாரணை நடத்த உள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

Report on anna university vc Soorappa: Inquiry with officers next week

author img

By

Published : Feb 12, 2021, 2:45 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தனது பணி காலத்தில் சுமார் 280 கோடி ரூபாய்க்கு ஊழல்கள் செய்துவிட்டதாக அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகார்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசனை விசாரணை அலுவலராக நியமனம் செய்து உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா கடந்த நவம்பர் மாதம் 11ஆம் தேதி உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில் நிதி முறைகேடுகள், நியமன முறைகேடுகள் உள்ளிட்டவற்றை விசாரணை செய்து மூன்று காலங்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்படி விசாரணைக் குழுவின் காலம் பிப்ரவரி 11ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அலுவலர் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீது புகார் அளித்தவர்களை விசாரணை செய்துள்ளோம். பல்கலைக்கழகத்தின் அலுவலர்களை விசாரிக்க வேண்டியுள்ளதால் விசாரணை ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டுமென அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதற்கு விரைவில் அனுமதி கிடைக்கும்.

துணைவேந்தர் பொறுப்பு மீது கூறப்பட்ட புகார்களுக்கு தேவையான முகாந்திரம் உள்ளது. சூரப்பா நேர்மையானவர் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கூறுவதில் உண்மை இல்லை. சூரப்பா பணிக்காலத்தில் தவறுகளும் முறைகேடுகளும் நடந்துள்ளதற்கு தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

அதனடிப்படையில் அடுத்த வாரத்தில் பல்கலைக்கழக பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதனைத் தொடர்ந்து சூரப்பாவிடம் விசாரணை நடத்தப்படும். விசாரணை ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்கி விரைவில் அரசாணை கிடைக்கும்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.