சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக திருக்கோயில் திருப்பணி, திருத்தேர், அடிப்படை வசதிகள் மேம்பாடு, பணியாளர்கள் நலத்திட்ட உதவிகள், ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கோயம்புத்தூர் மாவட்டம், கோவை வடக்கு வட்டம், அனுப்பர்பாளையம் அருள்மிகு பிள்ளையார் மாரியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான 9 கடைகளில் நிலுவைத்தொகை அதிகமாகவுள்ள வாடைகைதாரர்களிடம் நேரடியாக செயல் அலுவலர் மற்றும் கோவை வடக்கு சரக ஆய்வருடன் சென்று வாடகை நிலுவைத் தொகையில் ஒரு பகுதியாக ஒரு லட்சத்து 70ஆயிரத்து 770 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் அருள்மிகு வேணுகோபாலசாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கடை வாடகைதார்களிடம் இருந்து நிலுவை தொகை 95 ஆயிரத்து 526 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. கடலூர் வட்டம் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான புதுப்பாளையம் மாசிமக மண்டகப்படி கட்டடம் வெளிப்புறம் கடை எண் A&B வாடகை நிலுவை 2 லட்சத்து 96 ஆயிரத்து 544 ரூபாய் நிலுவை பலமுறை வாடகை கேட்டும் செலுத்தாததால் இரண்டு கடைகளும் பூட்டப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் ஆலடிப்பட்டி அருள்மிகு வைத்திலிங்க சுவாமி திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் நிர்வாகத்தில் உள்ள சட்டப்பிரிவு 46(3)ன் கீழ் பட்டியலைச் சேர்ந்த திருக்கோயிலாகும், இத்திருக்கோயிலுக்குச் சொந்தமாக 117 கடைகள் உள்ளது. இந்த கடைகளுக்கு 2016, 2019ஆம் வருடத்தில் நியாய வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு நாளது தேதி வரை வசுல் செய்யப்படாமல் 27 லட்சத்து 38ஆயிரம் ரூபாய் பாக்கியாக இருந்து வந்தது.
துத்துக்குடி இணை ஆணையர் அவர்கள் அறிவுரையின்படி தென்காசி உதவி ஆணையர் முன்னிலையில் ஆலங்குளம் சரக ஆய்வர், தென்காசி ஆய்வர், திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ள 12 வாடகைதாரர்களின் கடைகளுக்கு கடந்த 09ஆம் தேதியன்று நேரில் தல ஆய்வு செய்து சீல் வைக்கப்பட்டது.
அன்றைய தினம் 10 வாடகைதாரர்களிடம் இருந்து 2 லட்சத்து 60ஆயிரத்து 340 ரூபாய் அதன் தொடர்ச்சியாக கடந்த 10ஆம் தேதி 7 வாடகைதாரர்களிடம் இருந்து 98ஆயிரத்து 200 ரூபாயாக கூடுதல் 3 லட்சத்து 58ஆயிரத்து 540 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
கோவில்பட்டி அருள்மிகு பூவநாதசுவாமி திருக்கோயில் வாடகை நிலுவை வசூல் ஒரு லட்சத்து 50ஆயிரம் ரூபாய் சிவகிரி ஆர்.கே. நாச்சியார் கட்டளை வணிக கட்டடம் வாடகை - நிலுவை வசூல் 20ஆயிரம் ரூபாய் கருங்குளம் அருள்மிகு மகாதேவ மார்த்தான்டேஸ்வரர் திருக்கோவிலின் நன்செய் நிலத்திற்கு நிலுவை தொகை 15ஆயிரம் ரூபாய், பண்பொழி அருள்மிகு திருமலைக் குமாரசாமி திருக்கோயில் மனை வாடகை நிலுவை தொகை 10ஆயிரத்து 300 ரூபாய் நிலுவையில் உள்ளது.
இன்றைய மொத்த நிலுவை தொகை வசூல் 10 லட்சத்து 11ஆயிரத்து 689 ரூபாய் திருச்சி பெரிய கடை தெரு அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 90 சதுரஅடியில் உள்ள கட்டடத்திற்கு வாடகை நிலுவை தொகையை பல முறை கேட்டும் தராமல் காலதாமதம் செய்ததால் கடையைப்பூட்டி சீல் வைக்கப்பட்டது, மேலும் வாடகைதாரரிடம் 20ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
அதிகபட்ச நிலுவை உள்ளவர்கள் கடைகளை மட்டும் சீல் வைப்பதால் தாங்கள் தங்கள் நிலுவைகளை குறைத்து கொள்வதற்காக வாடகைதாராகள் வாடகை கட்டுவதில் தீவிரம் செலுத்துகின்றனர். இதுபோன்ற வாடகை மற்றும் குத்தகை நிலுவைத் தொகையினை செலுத்தி திருக்கோயிலுக்கு வருவாய் பெருக்குவதன் மூலம் திருக்கோயில் திருப்பணி மற்றும் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கும்.
இதையும் படிங்க: மு.க. ஸ்டாலினை சந்தித்த நாகலாந்து அமைச்சர்!