ETV Bharat / state

மருத்துவத் தகுதித் தேர்வில் உள்ள தடைகளை நீக்குக- அன்புமணி ராமதாஸ் - ளிநாடுகளில் மருத்துவர் பயிலும் மாணவர்களுக்கான இந்தியத் தகுதித் தேர்வு

சென்னை: வெளிநாடுகளில் மருத்துவர் பயிலும் மாணவர்கள் இந்தியத் தகுதித் தேர்வு எழுதுவதில் உள்ள தடையை நீக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

Remove barriers to medical eligibility tests said mp anbumani ramadoss

author img

By

Published : Jul 12, 2020, 3:57 PM IST

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள் இந்தியா திரும்பி, இந்திய மருத்துவக் கவுன்சில் அல்லது மாநில அளவிலான மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து பணியாற்ற விரும்பினால், அதற்காக வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வை தேசிய தேர்வு வாரியம் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை நடத்துகிறது. நடப்பு ஆண்டில் ஜூன் மாதத்தில் நடைபெற வேண்டிய இந்தத் தேர்வு கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை கடந்த ஜூலை 8ஆம் தேதி தொடங்கியது.

தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விளக்கக் குறிப்பேட்டின் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் தற்காலிகப் பட்டச் சான்றிதழ்களுடன் நிரந்தரமான பட்டச் சான்றிதழ், எந்த நாட்டில் மருத்துவம் படித்தார்களோ, அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் சான்றளிப்பு ஆகியவை பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. தேசிய தேர்வு வாரியத்தின் இந்த புதிய நிபந்தனை மாணவர்களின் கனவைச் சிதைத்திருக்கிறது.

எனவே, வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் நிரந்தரப் பட்டச் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டும் தான் வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வுகளை எழுத முடியும் என்ற தேசிய தேர்வு வாரியத்தின் நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் இருந்ததைப் போலவே, தற்காலிகப் பட்டச் சான்றிதழ் இருந்தாலே இந்தத் தேர்வுகளை எழுதலாம் என்று அறிவிக்க வேண்டும். இந்திய மாணவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு வாரியத்திற்கு வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வுகள் குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.