கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக ரெமிடெசிவிர் மருத்து பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மருத்துக்குத் தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய சிறப்பு மையத்தைத் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் அமைத்துள்ளது.
இந்த சிறப்பு மையத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பெறுவதற்காக ஏராளமானோர் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், மருந்து வழங்க முடியாதவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
ஒரு ரெம்டெசிவர் குப்பியின் விலை ஆயிரத்து 545 ரூபாய் ஆகும். ஒரு நோயாளிக்கு 6 ரெம்டெசிவிர் குப்பிகள் என, 9 ஆயிரத்து 408 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
மருத்துவரின் பரிந்துரை சீட்டு, கரோனா பாதிப்பு அறிக்கை, எக்ஸ்ரே, சிடி ஜெராக்ஸ், நோயாளியின் ஆதார் எண், அவரின் உதவியாளர் ஆதார் எண் ஆகியவற்றினை எடுத்து வர வேண்டும். 104 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு மருந்தை பெறலாம்.
தனியார் மருத்துவமனைகளில் ரெமிடெசிவர் மருந்துக் கிடைக்காததால் நோயாளிகளின் உறவினர்கள் பல மணி நேரம் காத்திருந்து பெற்றுச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.