சென்னை: செம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்துவருபவர் தீபன்(28). இவர் கரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை குறைந்த விலைக்கு வாங்கி 22,000 ரூபாய்க்கு அதிக விலைக்கு விற்க முயன்றுள்ளார்.
இதனையறிந்த, காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவை சேர்ந்த ஆய்வாளர் விநாயகம் என்பவர் தலைமையிலான காவல் துறையினர் மேடவாக்கத்தில் வைத்து மருத்துவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து, 6 ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் மருந்தகத்தில் பணிபுரியும் நரேந்திரன்(22) என்பவரிடம் இருந்து 19000 ரூபாய்க்கு வாங்கியது தெரியவந்தது. அதனடிப்படையில் நரேந்திரன் கைது செய்யப்பட்டு இருவரையும் பள்ளிக்கரணை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மு.க. ஸ்டாலின் ‘மே தின’ வாழ்த்து!