இது தொடர்பாக சுற்றுலா, கலாசார, இந்து சமய அறநிலையத் துறை செயலரும் கூடுதல் தலைமைச் செயலருமான அபூர்வ வர்மா அறநிலையத் துறைக்கு உத்தரவு பிறப்பித்து வெளிட்டுள்ள ஆணையில், “இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோயில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் பணிகாலத்தின்போது இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்துக்கு குடும்ப நல நிதியாக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டு, இதற்காக மாத சந்தாவாக ரூ. 15 பணியாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது.
தற்போது அந்த குடும்ப நல நிதி ரூ. 3 லட்சமாக உயர்த்தியும், பணியாளர்களிடம் பிடிக்கப்படும் மாத சந்தாவை ரூ. 60ஆக வசூலிக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.