ETV Bharat / state

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - குறுவை சாகுபடி

வருகிற ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 27, 2023, 6:45 AM IST

சென்னை: சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை அமைந்து உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக திறக்கப்படும் நீர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் விவசாய நிலங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்குகிறது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. டெல்டா பகுதி விவசாயிகள் இந்த நீரை நம்பியே குறுவை சாகுபடி செய்வர்.

இந்த மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கடந்த ஆண்டு மழையால் மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாகவே மே 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விட்டபட்டது.

மேட்டூர் அணை வரலாற்றிலேயே, கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிகழ்வு முதல் முறையாக நிகழ்ந்தது. இது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து வழக்கம் போல ஜூன் 12ஆம் தேதி டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேலும், இதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், வருகிற ஜூன் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.கஸ்டாலின் சேலம் மாவட்டதில் உள்ள மேட்டூர் அணைக்கு நேரில் சென்று டெல்டாவின் குறுவை பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்விற்கு முன்னதாக ஜூன் 11ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு சேலத்தில் வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த ஆண்டு கனமழையின் காரணமாக முன் கூட்டியே மேட்டூர் அணை திறந்து விடப்பட்டதால், 2021ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டில் 25 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு கூடுதல் நடவு நடைபெற்றதாக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடப்பாண்டில் வருகிற ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால், கூடுதல் நடவு செய்து அதிகமான விளைச்சல் ஏற்படும் என்றும், இதனால் விவசாயிகளுக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படும் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 5 ஆயிரம் கோடியே இடியுது.. 14 கோடி இடியாதா? .. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.