ETV Bharat / state

நயன்தாராவின் "அன்னபூரணி" ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்ப தெரியுமா? - Annapoorani release date has been announced

Annapoorani movie release date: நயன்தாராவின் 75வது படமான "அன்னபூரணி"யின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் குடும்பப் பார்வையாளர்களை ஈர்க்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 11:59 AM IST

சென்னை: ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள 'அன்னபூரணி- The Goddess of Food' படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி- The Goddess of Food’ வரும் டிசம்பர் 1ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக படக்குழு தெரிவித்து உள்ளது. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கி உள்ளார்.

டிசம்பர் மாதம் எப்போதும் திருவிழா காலம். இந்த காலங்களில் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அந்த வகையில் இந்தப் படத்தின் நல்ல கதையம்சம் குடும்பப் பார்வையாளர்களை ஈர்க்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இதையும் படிங்க: "வெளிப்புறப் படப்பிடிப்பில் போலீசார் லஞ்சம் கேட்கிறாங்க" - தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றச்சாட்டு!

'அன்னபூரணி - The Goddess of Food' படம் சரியான திட்டமிடலோடு சரியான நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமன் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளார். படத்தின் கலை பணிகளை ஜி துரைராஜும், வசனத்தை அருள் சக்தி முருகனும் எழுதி உள்ளனர்.

இப்படத்தில் பிரசாந்த் எஸ் (கூடுதல் திரைக்கதை), சஞ்சய் ராகவன் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), லிண்டா அலெக்சாண்டர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வெங்கி (பப்ளிசிட்டி டிசைனர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி'ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். இந்நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ”ட்ராவல் பண்ணுங்க” ரசிகர்களுக்கு ராஷ்மிகா மந்தனா அட்வைஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.