சென்னை, குரோம்பேட்டையை அடுத்த நாகல்கேணி சுடுகாட்டில் கரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் எடுத்து சென்றனர். அப்போது ஏற்கனவே அடக்கம் செய்ய 10 உடல்கள் இருப்பதாக அங்கு பணியில் இருப்பவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், புதைக்கும் வசதி மட்டும் கொண்ட நாகல்கேணி சுடுகாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய 24 முதல் 48 மணி நேரம் வரை ஆவதாக உறவினர்கள் வேதனைத் தெரிவித்தனர். எனவே அதிக பணியாளர்களை நியமித்து, வருகின்ற உடல்களை உடனடியாக அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.