சென்னை: எட்டு வயது சிறுமிக்கு, அவருடைய பெரியப்பா முறையுள்ள நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்பு கொண்டார்.
இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரயிலில் சிக்கியவரை மீட்ட பெண் காவலர்கள்: வைரல் வீடியோ!