ETV Bharat / state

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் விற்பனை - மாபியா போல் செயல்பட்ட பதிவுத் துறை அலுவலர்கள்

author img

By

Published : Jan 12, 2022, 8:22 PM IST

Updated : Jan 12, 2022, 10:36 PM IST

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பங்குப்போட்டு விற்பனை செய்த பதிவுத் துறை அலுவலர்களுக்கு எதிராக அறப்போர் இயக்கம், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளது.

சதுப்பு நிலம்
சதுப்பு நிலம்

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பங்குப்போட்டு விற்பனை செய்த பதிவுத் துறை அலுவலர்களுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அபகரித்து ஊழல் முறைகேடு செய்த சார்பதிவாளர் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளது.

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளது. மேலும் முக்கியமான ஆதாரங்களையும், புகாரில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்புகாரில், "1990 முதல் 2014 வரை 165 சட்டவிரோத பள்ளிக்கரணை சதுப்பு நில பதிவுகள் நடந்துள்ளன.

மொத்தம் கிட்டத்தட்ட 1000 ஏக்கர் அளவிற்கு (ஒரே நிலம் மீண்டும் பதிவானதைச் சேர்த்து) பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளில் சட்டவிரோத பதிவுகள் சார்பதிவாளர்களால் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் புகாரில் கடந்த 20 ஆண்டுகளில் எந்தெந்தப் பதிவுத் துறை அலுவலர்கள் எப்படி ஊழல் செய்து பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை அபகரிக்க முயன்றார்கள் என்பதை ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளோம். புகாரில் குறிப்பிடப்பட்ட அலுவலர்கள் தற்போது பதிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்துவருகின்றனர். இந்த அபகரிப்பில் பதிவுத் துறை அலுவலர்களே ஒரு மாபியா போல செயல்பட்டுள்ளது தெரிகிறது.

பள்ளிக்கரணை கிராமம் சைதாப்பேட்டை இணைப்பு 1 சார்பதிவாளர் அலுவலகத்தின்கீழ் வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலமான சர்வே எண் 657 / 1A நிலத்தில், 66.7 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் பொருட்டு, இதை சம்பந்தமே இல்லாத ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அப்போதைய சார்பதிவாளரான அங்கையற்கண்ணி பதிவுசெய்கிறார்.

இந்த நிலம் கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப்பன் பரம்பரைக்கு, ஆங்கிலேயர் கொடுத்த நிலம் என்று அதை விற்கும் குழு கூறிக்கொண்டும் அதைப் புதிதாக லக்ஷ்மணன் என்பவர் 2004ஆம் ஆண்டு உருவாக்கிய பூமி பாலக அறக்கட்டளை பெயரில் பதிவிடுகின்றனர். அது சதுப்பு நிலம் என்று தெரிந்து அருகிலுள்ள நிலத்தின் வழிகாட்டி மதிப்பை கேட்டுப் பெற்று அதைவிட மிகக்குறைவாக ஒரு ஏக்கர் ஒரு லட்சம் என்னும் விகிதம் 66 ஏக்கரை 66 லட்சத்திற்கு செய்கிறார் ராயபுரம் சார்பதிவாளர் அங்கயற்கண்ணி.

CCB 2012இல் மற்றவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவுசெய்யப்பட்டது. ஆனால் அங்கயற்கண்ணி மீது வழக்கு போடப்படவில்லை, பதவி நீக்கமும் செய்யவில்லை. மாறாக அவர்களுக்குப் பதிவுத் துறையில் பல பதவி உயர்வு கொடுக்கப்பட்டு இன்று தமிழ்நாட்டின் பதிவுத் துறையில் நடக்கும் மோசடிகளைக் கண்டுபிடிக்கும் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆயிரத்து 700 ஏக்கர் சதுப்பு நிலங்கள் வனத் துறையிடம் 2007 முதல் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இதற்குப் பிறகும் 38 பதிவுகள் செய்யப்பட்ட ஆதாரத்தையும் இணைத்துள்ளோம். 429/2 சர்வே எண் அரசுப் புறம்போக்கு என்று தெரிந்தும் அதை வனத் துறையிடம் ஒப்படைத்த பின்பும் 2010 முதல் 2013 வரை 10 ஏக்கர் பதிவுசெய்தனர் பதிவாளர்கள் ரவீந்திரநாத், ரகுமூர்த்தி.

மேலும் இவர்கள் இருவரும் 2013-14இல் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அபகரிக்கும் பொருட்டு இல்லாத, சர்வே எண் 657 / 3A5 என்று ஒன்று உருவாக்கிச் செய்துள்ளனர். அதேபோல் இல்லாத சர்வே எண் 657 / 3A6 என்று ஒன்று உருவாக்கி 1200 சதுரடிகளாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் கூறுபோட்டு 10-க்கும் மேற்பட்ட பதிவு செய்துள்ளார் ரகுமூர்த்தி.

இவர்கள் மீதும் எந்த நடவடிக்கை எடுக்காமல் ரவீந்திரநாத் அமைச்சர் மூர்த்தியின் ஊரான மதுரை வடக்கு உதவி பதிவுத் துறை தலைவர் பதவியில் உள்ளார். ரகுமூர்த்தி கள்ளக்குறிச்சி மாவட்ட பதிவாளர் - தணிக்கையில் உள்ளார். அங்குள்ள மோசடிகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் விற்பனை

உயர் நீதிமன்ற சதுப்பு நிலம் சம்பந்தமான உத்தரவுகளுக்குப் பிறகு செப்டம்பர் 2021இல் பள்ளிக்கரணை சதுப்பு நில சர்வே எங்கள் அனைத்தும் வில்லங்கத்தில் சேர்க்கப்பட்டு, இந்த சர்வே எண்களில் எந்தப் பதிவும் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நடந்த தவறுகள் அனைத்தும் ஊர்ஜிதம் ஆகிவிட்டது. ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள அலுவலர்கள் மீது இன்றுவரை குற்றவியல் நடவடிக்கையோ? துறை ரீதியாகப் பணிநீக்கமோ? பணியிடை நீக்கமோ? செய்யப்படவில்லை.

மேலும் இவர்களுக்கு, உயர் அலுவலர்கள் துறை அமைச்சர்கள் துணை இல்லாமல் இதுபோன்ற ஊழல்கள் செய்வது கடினம். அவர்கள்தாம் தொடர்ந்து உதவிசெய்து நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றிவருகின்றனர். எனவே விசாரணையில் இவர்கள் அனைவரின் பங்கு என்ன என்பதும் விசாரிக்க வேண்டும்" எனக் கேட்டுகொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளிக்கரணையில் சதுப்புநில சூழலியல் பூங்கா திறப்பு

Last Updated : Jan 12, 2022, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.