தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை முதல் செயல்படும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். இது குறித்து பத்திரப்பதிவுத்துறை அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ”அரசு அலுவலகங்கள் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தேவையான பிரிவு ஏ மற்றும் பி ஊழியர்களுடன், 33 சதவீத சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுடன் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. ஊழியர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும்.
அலுவலக நுழைவுவாயிலில் கை கழுவும் இடம் அமைத்து சோப்பு தண்ணீர் அல்லது கிருமிநாசினி வைத்து, பதிவுக்கு வரும் பொதுமக்களை கைகளை கழுவிய பின்னர் அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்.
பொதுமக்களும் முகக் கவசம் அணிந்து அலுவலகத்திற்குள் நுழைய அறிவுறுத்த வேண்டும். ஆவணப் பணிகளை மேற்கொள்ளும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. 55 வயதுக்கு மேற்பட்ட மற்றும் ஏற்கனவே உடல் நலம் குன்றியவர்களை பணிக்கு நியமிக்க வேண்டாம்.
கோவிட்-19 அதிகமுள்ள மக்கள் வெளியே வர தடை செய்யப்பட்ட மண்டலங்களில் செயல்படும் அலுவலகங்களை வேறு இடங்களுக்கு மாற்றி அமைத்துக்கொள்ளலாம்”, என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வரும் 20ஆம் தேதி 90% தொழிற்சாலைகள் இயங்கும் - புதுச்சேரி முதலமைச்சர்