சென்னை: பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் 18ஆம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியுள்ளது. .
மேலும், அதிகபட்ச வெப்பநிலை 31, குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லியைச் சூளும் பனிப்பொழிவு