ETV Bharat / state

ஊதிய உயர்வு குறித்து தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை!

சென்னை: தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை திடக்கழிவு மேலாண்மையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டி தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூய்மைப் பணியாளர்கள் நிலமை
தூய்மைப் பணியாளர்கள் நிலமை
author img

By

Published : Jun 5, 2020, 5:21 AM IST

சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை மையத்தில் தூய்மைப் பணியாளர்கள் 17 பேர் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் தெருக்களில் உள்ள அன்றாடக் குப்பைக் கழிவுகளை பொதுமக்களிடம் பெற்று, அதை தரம்பிரித்து வருவது இவர்களின் பணியாகும்.

17 பேரும் சுமார் பத்து ஆண்டுகளாக பீர்க்கன்கரணை பேரூராட்சித் திடக்கழிவு மேலாண்மை பணியில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வண்டலூரை அடுத்த படப்பை பகுதியில் இருந்து வந்து பணிபுரிந்து வருகின்றனர். கரோனா வைரஸ் ஊரடகங்கால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் தனியார் ஷேர் ஆட்டோ ஒன்றில் தினமும் பணிக்கு வந்து செல்கின்றனர். ஷேர் ஆட்டோவில் வருவதற்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வரை செலவிடுகின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் நிலமை
தூய்மைப் பணியாளர்களின் நிலை
இவர்களின் மாத ஊதியம் மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் 3 ஆயிரம் ரூபாய் போக்குவரத்து செலவிற்கு செலவாகி விடும் நிலை உள்ளது. மீதமுள்ள 3 ஆயிரம் ரூபாயை வைத்து, குடும்பம் நடத்த முடியவில்லை எனவும், ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருந்த நாளிலிருந்து மிகவும் பாதிப்படைந்து உள்ளதாக தூய்மைப் பணியாளர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஊதியத்தை உயர்த்தி தர அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, தங்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாயாவது ஊதியம் தர வேண்டுமென தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இவர்களுக்கு பணியின்போது கையுறைகள், முகக் கவசங்கள் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வழங்குவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே பாதுகாப்பு உபகரணங்களை தினந்தோறும் கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கரன்ட் கேட்கும் மக்கள்... கரன்சி கேட்கும் அலுவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.