ETV Bharat / state

கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு: பொதுப்படையான உத்தரவைப் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு - கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆடைக்கட்டுப்பாடு தொடர்பாக விளம்பரப் பலகைகள் வைக்க வேண்டும் என்ற பொதுப்படையான உத்தரவைப் பிறப்பிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், ஆடைக்கட்டுப்பாடு அமலில் உள்ள கோயில்களில் விளம்பரப் பலகைகள் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு
கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு
author img

By

Published : Mar 3, 2022, 5:22 PM IST

சென்னை: கோயில்களுக்கு வரும் பிற மதத்தவர்கள் முறையாக ஆடை அணிவதில்லை என்பதால், கோயிலின் புனிதத்தைக் காக்கும் வகையில், ஆடைக்கட்டுப்பாடு விதித்து, கோயில்கள் முன் விளம்பரப் பலகைகள் வைக்க உத்தரவிட வேண்டும் எனவும் பிற மதத்தவர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று (மார்ச் 3) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ஆடைக் கட்டுப்பாடு அமலில் உள்ள கோயில்களில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு

மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில், சில புகைப்படங்களைத் தாக்கல் செய்து, இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் முறையற்ற வகையில் ஆடைகளை அணிந்து செல்வதாக குற்றஞ்சாட்டினார். ஒவ்வொரு கோயில்களிலும் விளம்பரப் பலகைகள் வைக்க வேண்டும் என உத்தரவிட்டால் போதும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, ஒவ்வொரு கோயிலுக்கும் ஆடைக்கட்டுப்பாடு உள்ளது என்பதால் ஆடைக்கட்டுப்பாடு அமலில் உள்ள கோயில்களில் மட்டும் விளம்பரப் பலகைகளை வைக்க வேண்டும் என்றார்.

உத்தரவைப் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

அதேசமயம் அனைத்துக் கோயில்களிலும் ஆடைக்கட்டுப்பாடு குறித்த விளம்பரப் பலகைகள் வைக்க வேண்டுமென பொதுப்படையான உத்தரவைப் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், கோயில்களுக்கு பக்தர்கள் முறையாக ஆடை அணிந்து வரவேண்டும் எனவும்; இதைக் கோயில் நிர்வாகங்கள் முறைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் பயணிப்போர் மீது நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.