இலங்கை அகதி ஒருவர் தமிழ்நாட்டில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி இலங்கைக்கு தப்பிச்செல்ல இருப்பதாக, நாகப்பட்டினம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையினருக்குத் தகவல் கிடைதது. இந்தத் தகவலின் அடிப்படையில் கடலோரக் கிராமங்களில் தீவிரக் கண்காணிப்பில் கடலோரப் பாதுகாப்புப்படை குழும காவல் துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகிக்கக்கூடிய நபர் ஒருவர் தங்கியிருப்பதை அறிந்த காவல் துறையினர் அங்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் காஞ்சிபுரம் மாவட்டம், மடிப்பாக்கம் மூவரசம்பட்டில் வசித்து வரும் ஜனார்த்தனன் என்றும்; வயது 26 என்பதும், இவர் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் உதவியுடன் உரிய ஆவணங்கள் இன்றி கள்ளத்தனமாக படகு மூலம் இலங்கைக்கு தப்பி செல்ல இருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, மேற்கட்ட விசாரணைக்காக வேளாங்கண்ணி காவல் நிலையத்தில், அவரை கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையினர் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து தொடர்ந்து காவல் துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: