ETV Bharat / state

குளிர்சாதன பொருள் உதிரிபாகங்கள் கிடங்கில் தீ விபத்து! - Refrigeration spare parts in chennai

சென்னை: புரசைவாக்கம் பகுதியில் குளிர்சாதன பொருள் உதிரி பாகங்கள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் பொருள்கள் தீயில் கருகி நாசமானது.

தீ விபத்து
தீ விபத்து
author img

By

Published : Nov 10, 2020, 5:29 PM IST

சென்னை புரசைவாக்கம் வடமலை தெருவில் வசித்துவருபவர் லலித் புகார்( 42). இவர் சொந்தமாக அதேபகுதியில் குளிர்சாதன பெட்டிகள் தயாரிப்புக்கான உதிரி பாக கிடங்கை நடத்தி வருகிறார். உதிரி பாகங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் இன்று(நவ.10) காலை மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.

அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து, கிடங்கில் ஏற்பட்டிருந்த தீயை தண்ணீரை அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு இந்த தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே இருந்த கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உதிரி பாகங்கள் தீயில் கருகிய நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து வேப்பேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு 310 சிறப்பு மாநகர பேருந்துகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.