ETV Bharat / state

இன்று முதல் அமலுக்கு வருகிறது ஆவின் பால் விலை குறைப்பு! - Reduction in the price of Aavin milk comes into effect from today in Tamilnadu

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்த ஆவின் பால் விலை குறைப்பு உத்தரவு, இன்று(மே.16) முதல் அமலுக்கு வருகிறது.

Aavin milk
ஆவின் பால்
author img

By

Published : May 16, 2021, 7:34 AM IST

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க ஸ்டாலின் மே 7 ஆம் தேதி பொறுப்பேற்றதும், ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டார். இந்த பால் விலை குறைப்பானது, மே 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஆவின் பால் விலை குறைப்பு இன்று(மே.16) முதல் நடைமுறைக்கு வருகிறது.

பால் அட்டை வைத்திருப்போருக்கு லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. ஆவின் நீல நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.37-க்கும், அரை லிட்டர் ரூ.18.50-க்கும் விற்பனை செய்யப்படும். அதே போல, பச்சை நிறமுள்ள அரை லிட்டர் பால் ரூ.21க்கும், ஆரஞ்சு நிறம் ரூ.23க்கும், இளஞ்சிவப்பு நிறம் ரூ.18க்கும் விற்பனை செய்யப்படும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.