சென்னை: தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா சந்தித்து பேசியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் செஸ் வரியால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், செஸ் வரியை குறைத்தால் தங்களுக்கு அது உதவிகரமாக இருக்கும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும் கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற வணிகர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறினார்.
இதையும் படிங்க: நிதி அமைச்சரின் கருத்து குறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் - ஜாக்டோ-ஜியோ