சென்னை: JN சினிமாஸ் என்ற படநிறுவனம் சார்பில் J.பார்த்தசாரதி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் 'ரெட் சாண்டல் உட்' இந்த படத்தில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கேஜிஎப் ராம், எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத், வினோத் சாகர், பாய்ஸ் ராஜன், லட்சுமி நாராயணன், சைதன்யா, விஜி, அபி, கர்ணன் ஜானகி மற்றும் பலர் நடித்து உள்ளனர்.
இவர்களுடன் தயாரிப்பாளர் J.பார்த்தசாரதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் குரு ராமானுஜம் கூறும்போது, "இந்த கதை 2015இல் தமிழகத்தின் ஜவ்வாது மலை, படவேடு மலைப் பிரதேசங்களில் இருந்து ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட போனதாக சொல்லி திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர வனத்துறையினரால் 20 தமிழர்களை சுட்டு கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.
படத்தில் நாயகன் வெற்றி கதாநாயகியின் அண்ணனான கருணாகரன் என்னும் நபரை தேடி ரேணிகுண்டாவிற்கு செல்கிறார். அங்கு வெற்றி செம்மரம் கடத்த வந்திருப்பதாக சொல்லி வனத்துறையினரால் கைது செய்யப்படுகிறார். அவருடன் இணைந்து இன்னும் சில தமிழர்களை கைது செய்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறான் வெற்றி.
அவர்களுக்கு பின்னால் இருக்கும் கடத்தல்காரர்கள் யார் என்பதை விசாரிக்கிறார்கள். கடத்தல்காரர்கள் யார் என்பது விசாரணையில் தெரிய வராத போது அவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். கடத்தல்காரனை ஏன் பிடிக்க நினைத்தார்கள்? என்கவுண்டர் செய்ய சொன்னது யார்? சாதாரண ஜெயில் தண்டனை கொடுக்கக் கூடிய செம்மரம் வெட்டுக்கு மனித உரிமை மீறலை செய்து எல்லோரையும் என்கவுண்டர் செய்தது எப்படி.
-
Hard-hitting, daring Trailer is OUT now
— JN CINEMAS (@JnCinemas) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
▶️ https://t.co/MTSRwgt1gk#RedSandalWood in theatres from Sept 8th. @SamCSmusic Musical @act_vetri @guru_ramanujam @JnCinemas @DiyaaMayurikha @GarudaRaam @kabalivishwanth @talk2ganesh @resulp @ARichardkevin @saregamasouth @ProBhuvan pic.twitter.com/Hu8NeWT95N
">Hard-hitting, daring Trailer is OUT now
— JN CINEMAS (@JnCinemas) August 26, 2023
▶️ https://t.co/MTSRwgt1gk#RedSandalWood in theatres from Sept 8th. @SamCSmusic Musical @act_vetri @guru_ramanujam @JnCinemas @DiyaaMayurikha @GarudaRaam @kabalivishwanth @talk2ganesh @resulp @ARichardkevin @saregamasouth @ProBhuvan pic.twitter.com/Hu8NeWT95NHard-hitting, daring Trailer is OUT now
— JN CINEMAS (@JnCinemas) August 26, 2023
▶️ https://t.co/MTSRwgt1gk#RedSandalWood in theatres from Sept 8th. @SamCSmusic Musical @act_vetri @guru_ramanujam @JnCinemas @DiyaaMayurikha @GarudaRaam @kabalivishwanth @talk2ganesh @resulp @ARichardkevin @saregamasouth @ProBhuvan pic.twitter.com/Hu8NeWT95N
இதில் பிரபாவிற்கும், கர்ணாவிற்கும் என்ன நடந்தது என்பது உண்மைக்கும் மனதிற்கும் நெருக்கமான காட்சிகளுடன் விவரிக்கிறது திரைக்கதை. படப்பிடிப்பு ரேணிகுண்டா, தலக்கோணம், தேன்கனிக்கோட்டை போன்ற காட்டு பகுதிகளில் நடைபெற்றது. படம் வருகிற செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக் குழு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவிலும் ஸ்ரீ சுப்புலக்ஷ்மி மூவீஸ் K.ரவி வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:“உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லன்னாங்க” - சந்திரமுகி 2 விழாவில் வடிவேலு பேச்சு!