தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா, கர்நாடகா மாநிலங்களின் கடலோர பகுதிகளில் நாளை (அக் 22) மிக அதிகளவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்படுகிறது. நான்கு மாவட்டங்களில் 21 சென்டி மீட்டர் அல்லது அதற்கும் அதிகளவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேகமலை அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கத் தடை!