ETV Bharat / state

மாங்குரோவ் காடுகள் குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு - சேதமடைந்த மாங்குரோவ் காடுகள்

தானே புயல், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றால் கடலூரில் அழிந்த மாங்குரோவ் காடுகளை மீண்டும் உருவாக்கக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் மாங்குரோவ் காடுகள்
மீண்டும் மாங்குரோவ் காடுகள்
author img

By

Published : Jul 30, 2021, 7:09 PM IST

Updated : Sep 30, 2022, 10:33 AM IST

சென்னை: கடலூர் மாவட்டம் பிச்சாவரத்திலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள சொதிகுப்பம் கிரமத்தில், உப்பனாறு கரையில் 15 கி.மீ. தூரத்துக்கு மாங்குரோவ் காடுகளை, ஆலமரம் என்னும் தொண்டு நிறுவனம் அமைத்தது.

தானே புயலிலும், 2015ஆம் ஆண்டு வெள்ளத்திலும் இந்த மாங்குரோவ் காடுகள் அழிந்துவிட்டதாகவும், அவற்றை மீண்டும் உருவாக்க உத்தரவிடக் கோரி, ஆலமரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவன செயலாளர் அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் மாங்குரோவ் காடுகள் சேதமடைந்துள்ளதாக நேரில் ஆய்வுசெய்த மத்திய குழு அறிக்கை அளித்ததாகவும், அதன்படி, மீண்டும் இந்தக் காடுகளை உருவாக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என்பதால், மீண்டும் அப்பகுதியில் மாங்குரோவ் காடுகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 10 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் குழு மதிப்பீடு செய்துள்ளதாகவும், மாங்குரோவ் காடுகளை மீண்டும் வளர்க்காவிட்டால், சுற்றுச்சூழலுக்கும், பறவைகளுக்கும் ஆபத்து ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழ்நாடு அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் இது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகக் கூறியதையடுத்து மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

Last Updated : Sep 30, 2022, 10:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.