ETV Bharat / state

குன்றத்தூரில் ரூ.26 கோடி மதிப்பான அரசு நிலம் மீட்பு - government land recoverd

சென்னை குன்றத்தூரில் 26 கோடி ரூபாய் மதிப்பிலான அரசுக்கு சொந்தமான நிலத்தில் வாழை தோட்டம் வைத்திருந்த நபரிடம் இருந்து நிலம் மீட்கப்பட்டது.

குன்றத்தூரில் ரூ.26 கோடி மதிப்பான அரசு நிலம் மீட்பு

author img

By

Published : Jul 8, 2022, 10:44 AM IST

சென்னை: குன்றத்தூர், மேத்தா நகரில் அரசுக்கு சொந்தமான 1 1/2 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து வாழை தோட்டம் வைத்திருந்தார். இதையறிந்த குன்றத்துார் வருவாய் துறையினர் கடந்த மார்ச் மாதம் அந்த இடம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் அந்த இடம் அரசுக்கு சொந்தமான களம் புறம்போக்கு என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இடத்தை அதிரடியாக மீட்டனர். அதன்பின் ஆக்கிரமிப்பாளர் சார்பில், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டது. அதனால் தடை உத்தரவை ரத்து செய்ய வருவாய் துறை சார்பில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதற்கிடையில் அந்த இடத்தில் மீண்டும் வாழை மரங்கள் வளர்க்கப்பட்டன. தடை உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து ஸ்ரீ பெரும்புதுார் கோட்டாச்சியர் சைலேந்திரன், குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரம் ஆகியோர் தலைமையிலான வருவாய் துறையினர் காவல் துறை பாதுகாப்புடன் இந்த இடத்தை இன்று அதிரடியாக மீட்டனர்.

குன்றத்தூரில் ரூ.26 கோடி மதிப்பான அரசு நிலம் மீட்பு

மீட்கப்பட்ட இடத்தில் குன்றத்துார் தாலுக்கா அலுவலகம் கட்டுவதற்கு பூமி பூஜையும் போடப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 26 கோடி ரூபாய் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து ஒரே நாளில் ரூ.1,16,500 அபராதம் வசூல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.