ETV Bharat / state

ஈபிஎஸ் - ஓபிஎஸ்சை பிரதமர் சந்திப்பதில் நீடித்த சிக்கல் - முழுப் பின்னணி என்ன? - PM Modi tamilnadu visit full details

தென்னிந்திய பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ஈபிஎஸ்சையும், ஓபிஎஸ்சையும் சந்திக்காமல் சென்றது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

ஈபிஎஸ் - ஓபிஎஸ்சை பிரதமர் சந்திப்பதில் நீடித்த சிக்கல் - முழுப் பின்னணி என்ன?ஈபிஎஸ் - ஓபிஎஸ்சை பிரதமர் சந்திப்பதில் நீடித்த சிக்கல் - முழுப் பின்னணி என்ன?
ஈபிஎஸ் - ஓபிஎஸ்சை பிரதமர் சந்திப்பதில் நீடித்த சிக்கல் - முழுப் பின்னணி என்ன?
author img

By

Published : Apr 9, 2023, 4:32 PM IST

Updated : Apr 9, 2023, 6:39 PM IST

சென்னை: இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்திக்காதது, மீண்டும் அதிமுக வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே அதிமுக - பாஜக இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் நிலவி வருகிறது.

தொடக்கத்தில் தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டை எடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தற்போது அதில் இருந்து சற்று இறங்கி உள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், அதிமுக - பாஜக கூட்டணியை உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபடுத்திய நிலையில், இன்னும் இறுதி செய்யவில்லை என அண்ணாமலை கூறி இருந்தார்.

அண்ணாமலையின் இது போன்ற பேச்சுகளுக்கு திருப்பம் கொடுக்கும் வகையில், அதிமுகவின் தம்பிதுரையை அனுப்பி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கக் கூறினார், ஈபிஎஸ். ஆனால் நடைபெற இருக்கக் கூடிய கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கு 3 இடங்கள் ஒதுக்கக் கோரிச் சென்ற தம்பிதுரை, இறுதியாக அண்ணாமலையின் நடவடிக்கைகளை சுட்டிக் காட்டி உள்ளார்.

அதற்குக் கூட்டணியை உறுதி செய்வது டெல்லி தலைமைதான், அண்ணாமலை பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அமித்ஷா கூறியதாக சொல்லப்படுகிறது. ஒற்றைத் தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்து, இன்று வரை ஓபிஎஸ்சை இணைத்துக் கொள்ளுங்கள் என்ற நிலைப்பாட்டில்தான் பாஜக உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த ஈபிஎஸ் தரப்பினர், இது எங்கள் உட்கட்சி விவகாரம் என்றும், இதில் நீங்கள் (பாஜக) தலையிட வேண்டாம் என்றும் கூறி வந்தனர். மேலும் பிரதமர் மோடி எப்போது தமிழ்நாட்டுக்கு வருகை தந்தாலும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் தனியாக சந்திக்க நேரம் கேட்பது வழக்கம். ஆனால் வரவேற்பு, வழியனுப்பு நிகழ்வில் மட்டுமே இரண்டு பேரும் கலந்து கொள்வார்கள்.

இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி சென்னை புதிய விமான நிலைய முனையம், சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம், ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழா மற்றும் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன் பின்னர் பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ்சுக்கு 15 நிமிடங்கள், ஓபிஎஸ்சுக்கு 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதனிடையே நேற்று மாலை 7.30 மணிக்கு அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்த பின்னர், 8.15 மணிக்குள் இருக்கும் 45 நிமிடங்களில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்சை பிரதமர் மோடி சந்திப்பார் எனவும் கூறப்பட்டது. ஆனால் நேரம் இல்லாததால் சந்திக்க முடியவில்லை என பிரதமர் மோடியின் தரப்பினர் விளக்கம் அளித்தனர்.

இருப்பினும், கர்நாடகாவில் தேர்தல் நேரத்தில் இருவரையும் தனித்தனியாக சந்திப்பது சரியாக இருக்காது என்றும், இரண்டு பேரையும் இன்னும் சில காலத்திற்கு சமமாகவே நடத்துவது தற்போது தமக்கு (பாஜக) நன்மை என்றும் இரண்டு பேரையும் சந்திக்க பிரதமர் மோடி மறுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

கர்நாடக தேர்தலைப் பொறுத்தவரையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு தரப்பினரும் போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் பாஜக யார் பக்கம் இருக்கப் போகின்றது என்பதும் கேள்வியை எழுப்பி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தேர்தல் நெருங்கும் சமயத்தில் முடிவெடுக்கலாம் என்ற நிலைப்பாட்டில் டெல்லி பாஜக இருப்பதாக கூறப்படுகின்றது. அதுவரை ஈபிஎஸ்சையும், ஓபிஎஸ்சையும் இணைப்பதற்காக முயற்சி செய்து, இருவரையும் சமமாகவே பாஜக நடத்தும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரதமரை வரவேற்காத அண்ணாமலை.. முழுப் பின்னணி என்ன..?

Last Updated : Apr 9, 2023, 6:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.