கடந்த மாதம் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது மீதமுள்ள நான்கு தொகுதிகளின் சட்டப்பேரவை இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைதேர்தலின்போது தருமபுரி, திருவள்ளூர், கடலூர், தேனி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தவறுகள் இழைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதனால், மறுவாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் 8 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு மாவட்டங்களில் ஒரு வாக்குச்சாவடிகளிலும், தேனி மாவட்டத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு மே 19ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
மறுவாக்குப்பதிவு அரசியல் தலைவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.