சென்னை: சட்டப்பேரவையில் இன்று (செப். 6) பேசிய ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற சினிமா பாடலைப் பாடி, இது 20 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஒருவரைப்பற்றிதான் பாடினேன் என்றார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் எழுந்து அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், "ஒருவர் பேரவையில் இல்லாதபோது அவரது பெயரைப் பயன்படுத்தினால் அதைப் பேரவை குறிப்பிலிருந்து நீக்கிவிடலாம், பெயர் குறிப்பிடவில்லையெனில் நீக்கத் தேவையில்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க: 'சம்சாரம் இல்லாமல் வாழலாம்; மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது'