தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை, அனைத்து மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இரு கல்வி நிறுவனங்களில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கல்வி ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்றும், அண்மைக்காலமாக வழங்கப்படாமல் இருக்கும் நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள பதிவில்,’உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும் தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோரிடம் அறிக்கை கோரப்பட்டிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.
-
தமிழ் எம்.ஏ மாணவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை
— Dr Ravikumar M P (@WriterRavikumar) June 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகை ரூபாய் 2000/- அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படவில்லை என்றும்
">தமிழ் எம்.ஏ மாணவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை
— Dr Ravikumar M P (@WriterRavikumar) June 5, 2021
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகை ரூபாய் 2000/- அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படவில்லை என்றும்தமிழ் எம்.ஏ மாணவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை
— Dr Ravikumar M P (@WriterRavikumar) June 5, 2021
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகை ரூபாய் 2000/- அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படவில்லை என்றும்
தமிழ் பயிலும் மாணவர்கள் நலன் மீது அக்கறை கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ள அமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மீண்டும் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிவாரணம்!