தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பு பெற்ற சட்ட கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் www.tndalu.ac.in என்கிற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனை மாணவர்கள் தங்களுடைய விண்ணப்ப எண்ணைப் பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம்.
கலந்தாய்வில் பங்கு பெற தகுதியுள்ள மாணவர்களுக்கான விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தெரிவிக்கப்படும். சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு ஆன்லைன் வாயிலாக நடைபெறும்.
தமிழ்நாட்டில் 13 அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் ஒரு தனியார் சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மொத்தமுள்ள ஆயிரத்து 651 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த 11 ஆயிரத்து 219 மாணவர்களில் 10 ஆயிரத்து 858 மாணவர்கள் தகுதிப்பெற்றனர். 361 மாணவர்களின் விண்ணப்பங்கள நிராகரிக்கப்பட்டு்ளளன என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: ஓபிசி பிரிவுக்கு இட ஒதுக்கீடு கிடையாது