ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்! - ஈரநிலங்கள்

தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்கள் இன்று ராம்சர் ஈரநில அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்

author img

By

Published : Aug 4, 2022, 12:18 AM IST

சென்னை: இந்தியாவில் மேலும் 10 ஈரநிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற ஈரநிலங்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளகக் காப்பகம், வேம்பனூர், வெள்ளோடை பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம் & உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம் ஆகியவற்றுக்கு ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளது.இந்த சர்வதேச அங்கீகாரம் மிகவும் பெருமைக்குரியது என முதலமைச்சர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்தியாவுக்கு மேலும் 10 ஈரநிலங்களுக்கு ராம்சர் ஆங்கீகாரம் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டை தவிர்த்து மீதி நான்கு ஒடிசாவில் உள்ள சட்கோசியா பள்ளத்தாக்கு, கோவாவில் உள்ள நந்தா ஏரி, கர்நாடகாவின் ரங்கநதிட்டு பறவைகள் சரணாலயம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிர்பூர் ஈரநிலம் என சேர்த்து இந்தியாவில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற ஈரநிலங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு நம்மிடம் கூறுகையில், இது ராம்சர் செயலகத்தின் அங்கீகாரம் என்பதால் அரசு உத்தரவு தேவை இல்லை என கூறினார்.

இதையும் படிங்க:'விவசாயத்தை அழித்து விமானநிலையம் அமைப்பதா? பிறந்த மண்ணை விட்டுக்கொடுக்கமாட்டோம்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.