ETV Bharat / state

வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம்.. தீவிர கண்காணிப்பில் காவல்துறை - northern state robbers in chennai

தமிழ்நாட்டில் வடமாநில கொள்ளயர்களின் கைவரிசை அதிகரித்து வருவதால், தமிழ்நாடு காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

அதிகரிக்கும் வடமாநில கொள்ளையர்களின் அட்டகாசம்.. தீவிர கண்காணிப்பில் தமிழ்நாடு காவல்துறை

author img

By

Published : Nov 30, 2022, 10:02 AM IST

Updated : Nov 30, 2022, 10:37 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கட்டுமான தொழில் தொடங்கி கூலி வேலை வரை அனைத்து தொழில்களிலும் வடமாநில நபர்களின் முகங்களாகவே உள்ளது. தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், சமீபகாலமாக வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்களின் அட்டகாசமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

குறிப்பாக ஆன்லைன் லோன் ஆப், ஏடிஎம் மோசடி, ஓடிபி (OTP) மோசடி உள்ளிட்ட சைபர் கிரைம் குற்றங்களில் மட்டுமே ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல்கள், தற்போது கொலை மற்றும் கொள்ளை போன்ற கொடூர செயல்களிலும் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

தலைநகரில் அரங்கேறிய சம்பவங்கள்: முக்கியமாக சென்னையில் கடந்தாண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி வரை பிற மாநிலத்தைச் சேர்ந்த 424 நபர்களும், வெளிநாட்டைச் சேர்ந்த 96 நபர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

அதில் 75 நபர்கள் மோசடி தொடர்பான வழக்குகளிலும், 136 நபர்கள் குற்ற வழக்குகளிலும், 14 சட்டம் ஒழுங்கு வழக்குகளிலும், 197 சிறப்பு மற்றும் உள்ளூர் சட்ட வழக்குகளிலும், 35 நபர்கள் மோசடி வழக்குகளிலும் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிற மாநிலத்தைச் சேர்ந்த 396 பேர் மற்றும் 82 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 19 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்த சம்பவங்கள்: சமீபகாலமாக அதிக கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி ஞானபிரகாசத்துக்கு சொந்தமான அண்ணா நகர் வீட்டில், ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ஐந்து லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இதனை நேபாள நாட்டைச் சேர்ந்த பூபேந்தர் என்பவர் தனது கூட்டாளியுடன் இணைந்து ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் நேபாள கொள்ளையர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் கடந்த மே மாதத்தில், மயிலாப்பூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா தம்பதி கொலை செய்யப்பட்டு 8 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

நேபாள நாட்டைச் சேர்ந்த கார் ஓட்டுனர் லால் கிருஷ்ணா, அவரது நண்பர் ரவிராயுடன் இணைந்து தம்பதியை கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டது பின்னர் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பரில், ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த தொழிலதிபரான பன்சிதர் குப்தா வீட்டில் 10 லட்சம் பணம், ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வீட்டில் வேலை பார்த்த நேபாளத்தைச் சேர்ந்த திபேந்திரா என்பவர் கொள்ளையடித்துச் சென்றார்.

இதேபோல் இந்தமாதம் நடிகர் ஆர்.கேவுக்கு சொந்தமான நந்தம்பாக்கம் வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி ராஜியை கத்தியை காட்டி மிரட்டி 228 சவரன் நகை மற்றும் 2 லட்சம் பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நேபாள நாட்டைச் சேர்ந்த காவலாளி ரமேஷ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டு 120 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. சென்னையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் மோசடி, கொள்ளை, கொலை போன்ற வழக்குகளில் தொடர்புடையதாக மொத்தம் 20 நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

தீவிர கண்காணிப்பில் காவல்துறை: இவ்வாறு தொடர்ச்சியாக வட மாநில நபர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் இவற்றை தடுக்க சென்னை காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக வட மாநில தொழிலாளர்கள் பணிக்கு சேரும்போது, அவர்களது ஆதார் கார்டு மற்றும் கைரேகை பதிவுகளை முறையாக ஆய்வு செய்து காண்ட்ரக்டர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அவர்களை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாடகைக்கு தங்கும்போது அவர்களின் விவரங்கள் அடிக்கடி ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டினர் தங்கும் ஓட்டல், லாட்ஜ், விடுதி போன்ற இடங்களில் கண்காணித்து படிவத்தை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி சாலையோரங்களில் பெட்ஷீட், பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற தொழில்களில் ஈடுபடும் நபர்களுக்கு பிற குற்ற நடவடிக்கையில் தொடர்பு உள்ளதா என தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மொத்த விவரங்களையும் அடங்கிய தரவுதளத்தை தொழிலாளர் ஆணையம், கல்வி நிறுவனங்கள் ஆகியோருடன் இணைந்து தயார் செய்து வருவதாகவும், நீண்ட மாதங்களாக இருக்கும் வெளிநாட்டினரையும் கண்காணித்து வருவதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஜவுளிக்கடை காவலாளியை தாக்கி ஆடைகளை லாரியில் ஏற்றி சென்ற கும்பல்..

Last Updated : Nov 30, 2022, 10:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.