ETV Bharat / state

10.5% இடஒதுக்கீடு வன்னியர் சாதியினருக்கு மட்டுமல்ல - ராமதாஸ் - சென்னை உயர்நீதிமன்றம்

வன்னியர் சாதியினருக்கு மட்டும் 10.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை, வன்னியகுல சத்திரியர் பிரிவில் உள்ள ஏழு சாதியினருக்கும் சேர்த்தே வழங்கப்பட்டுள்ளதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

ராமதாஸ்
ராமதாஸ்
author img

By

Published : Oct 2, 2021, 6:28 PM IST

சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக ராமதாஸ் இன்று (அக். 2) பதில் மனுவைத் தாக்கல்செய்தார்.

அறிக்கை, மக்கள் தொகையின் அடிப்படையிலேயே இடஒதுக்கீடு

அதில், “1989ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களால் போட்டியிட முடியாததால், தனியாக இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கைவைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் வன்னியர்கள் உள்ளிட்ட 106 சாதியினரை உள்ளடக்கி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் என்னும் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு, 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையையடுத்து பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரின் அறிக்கை, மக்கள் தொகை விகிதாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

வன்னியருக்கு மட்டுமல்ல இடஒதுக்கீடு

தொடர்ந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சீர்மரபினர், பிற பிரிவினருக்கு முறையே 7 மற்றும் 2.5 விழுக்காடு இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

தேர்தலில் குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகளைப் பெற அரசியல் உள்நோக்கத்துடன் இந்த இடஒதுக்கீடு வழங்குவதாகக் கூறுவது தவறு. முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த புதிய அரசும் உத்தரவிட்டுள்ளது.

ஆகையால் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. வன்னியர் சாதியினருக்கு மட்டும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை, வன்னியகுல சத்திரியர் பிரிவில் ஏழு சாதியினர் உள்ளனர்.

அபராதத்துடன் தள்ளுபடிக்கு கோரிக்கை

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வுசெய்ய நீதிபதி குலசேகரன் குழு அமைக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை மறு ஆய்வுசெய்யலாமா அல்லது வேண்டாமா என ஆய்வுசெய்யவே அந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளதால், இந்த வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடிசெய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நா கூசாமல் பேசிய துரைமுருகனுக்கு கண்டனம் - ஓபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.