ETV Bharat / state

இந்திய இறையாண்மைக்கு எதிரான சிங்களக் கடற்படையின் தாக்குதலுக்கு ராமதாஸ் கண்டனம் - ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

சென்னை: இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழ்நாடு மீனவர்களைத் தாக்குவதும், கைதுசெய்வதும் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவால் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்
ராமதாஸ்
author img

By

Published : Jan 10, 2021, 8:32 PM IST

Updated : Jan 11, 2021, 12:22 PM IST

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 517 விசைப் படகுகளில் மீனவர்கள் நேற்று (ஜன. 09) மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இரவு ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தங்கச்சி மடத்தைச் சேர்ந்த கிருபை என்பவரின் படகில் சென்ற, வளன் கவுசிக், மிக்கேயாஸ், கினிங்ஸ்டன், சாம் ஸ்டில்லர், கிருபை உள்ளிட்ட 9 மீனவர்களை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக மற்ற மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர்.

கடந்த டிசம்பர் 14, 22ஆம் தேதிகளில் 40 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்த சம்பவத்தை தொடர்ந்து, இந்த ஆண்டின் முதல் சம்பவமாக நேற்று 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளது. இது, ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 52 மீனவர்களையும், 7 விசைப்படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும், பாரம்பரிய இடத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை (ஜன. 11) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இதன், காரணமாக ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "வங்கக்கடலில் கச்சத்தீவை ஒட்டிய பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் மீது சிங்களப் படையினர் கற்களை வீசித் தாக்கியதுடன், 9 மீனவர்களையும் கைது செய்திருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

சிங்களக் கடற்படையின் தாக்குதல்

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

பன்னாட்டு விதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், படகுகளை சிறைப்பிடிப்பதும் கண்டிக்கத்தக்கவை. ராமேசுவரம், தங்கச்சிமடம், அதையொட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் கூடுதலான மீனவர்கள் 300க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

கச்சத்தீவு பகுதியில் நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் வந்த சிங்களக் கடற்படையினர், தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர். சிங்களப்படையினரின் தாக்குதலுக்கு அஞ்சி, மீனவர்கள் கரைக்கு திரும்ப முயன்ற போது, அவர்களை வழிமறித்து தாக்கினர்.

மீனவர்கள் கடலில் விரித்திருத்த வலைகளை அறுத்து வீசியுள்ளனர். அதுமட்டுமின்றி, கிருபை என்பவரின் படகை சிறை பிடித்த சிங்களக் கடற்படையினர், அதிலிருந்த 9 மீனவர்களை கைது செய்து தலைமன்னாருக்கு அழைத்துச் சென்றனர்.

இந்திய இறையாண்மைக்கு எதிரான சிங்களக் கடற்படை

சிங்களக் கடற்படையின் இனவெறி தாக்குதல்
சிங்களக் கடற்படையின் இனவெறி தாக்குதல்

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலும், சிறைபிடிப்பும் இந்திய கடல் எல்லைக்குள் தான் நடந்துள்ளன. சிங்களக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இக்கொடிய தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்திய இறையாண்மைக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்களை கடலோரக் காவல்படை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

ஜெய்சங்கரின் இலங்கை பயணம்

ஜெய்சங்கரின் இலங்கை பயணம்
ஜெய்சங்கரின் இலங்கை பயணம்

ஆனால், இலங்கைப் படையினர் இவற்றில் எந்த விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைத்து மீனவர்களைத் தாக்குவதும், கைதுசெய்வதும் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவாலாகும். ட

இதை இந்திய அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு திரும்பிய 24 மணி நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

கடந்த சில நாட்களில் மட்டும் தமிழ்நாட்டு மீனவர்கள் 40 பேரை கைது செய்துள்ள சிங்களப்படையினர், 6 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

உடனடியாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இதுவரை கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் அனைத்தையும் மீட்டு வரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ட்விட்டர் பாலோயர்கள்: உலக அரசியல் தலைவர்களில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி

Last Updated : Jan 11, 2021, 12:22 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.