ETV Bharat / state

சென்னை மாநகரின் நிலை என்னவாகுமோ? நிவாரணப் பணிகளை துரிதபடுத்த ராமதாஸ் வலியுறுத்தல்! - chennai rain news

Ramadoss Statement regards Chennai rain: சென்னையில் கனமழை தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரைவுபடுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ramadoss
இராமதாஸ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 11:45 AM IST

சென்னை: சென்னையின் பெரும்பான்மையான இடங்களில் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்திருக்கிறது. அதனால், அப்பகுதிகளில் வாழும் மக்கள், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனை உடனடியாக கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் பணிகளி மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறித்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பெய்த மழையால், மாநகரத்தின் பெரும்பான்மையான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. சாலைகளில் வெள்ளம், வீடுகளுக்குள் தண்ணீர், போக்குவரத்து பாதிப்பு என பல வழிகளில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மழை பாதிப்புகளை சரி செய்ய போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.

மழை நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அமைச்சர்கள் களத்திற்குச் செல்ல வேண்டும் என்று முதலமைச்சர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியான போதிலும், களத்தில் அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. சென்னை மாநகரத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், அவர்களின் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாலும், மற்ற பகுதிகளை மாநகராட்சியோ, அமைச்சர்களோ கண்டுகொள்ளவில்லை.

மழை பாதிப்புகள் குறித்து மாநகராட்சி அறிவித்துள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தாலும், உடனடியாக நடவடிக்கை இல்லை. இதனால் வரும் நாட்களில் சென்னை மாநகரின் நிலை என்னவாகுமோ என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முதல் கட்டமாக முடிக்கப்பட்ட பிறகு, இப்போதுதான் ஓரளவு கனமழை பெய்துள்ளது. இந்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீரை வெளியேற்ற, மழைநீர் வடிகால்கள் திணறுகின்றன என்பதுதான் உண்மை. எனவே, மழைநீர் வடிகால்களின் அமைப்பு, அமைக்கப்படும் முறை ஆகியவற்றை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தியிருந்தேன். அதையே மீண்டும் வலியுறுத்துகிறேன்.

மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் கனமழை தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரைவுபடுத்த வேண்டும். மழை மற்றும் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மழை நீரில் மூழ்கிய ஆவடி காவல் நிலையம்.. ஜெனரேட்டர் மூலம் தண்ணீரை வெளியேற்றும் காவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.