ETV Bharat / state

அரசு கலைக்கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்களுக்கு தர ஊதிய உயர்வு ஏன் வழங்கவில்லை.. ராமதாஸ் கேள்வி - ராமதாஸ் கேள்வி

தமிழ்நாட்டில் கல்லூரி கல்வி இயக்குநரகம், அரசு கலைக்கல்லூரியில் உதவிப் பேராசிரியர்களுக்கு பணிநிலைப்பு சான்றிதழ்கள் வழங்கவில்லை என ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 16, 2022, 5:31 PM IST

Updated : Aug 16, 2022, 7:30 PM IST

பாமகவின் நிறுவனத் தலைவர் ராமதாஸ், அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள உதவிப்பேராசிரியர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ், பணிநிலை உயர்வு உள்ளிட்டவற்றை வழங்கக்கோரி இன்று (ஆக.16) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், 'தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 7 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த 1,000-க்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர்களுக்கு, ஓராண்டில் வழங்கப்பட வேண்டிய பணி நிலைப்பு ஆணை, இன்று வரை வழங்கப்படவில்லை.

கல்லூரிக்கல்வி இயக்குநரகத்தின் அலட்சியத்தால் உதவிப்பேராசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் பணி நிலை உயர்வு மறுக்கப்பட்டு வருவது நியாயப்படுத்த முடியாத அநீதி ஆகும். தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான கலை மற்றும் கல்லூரிகளுக்கு 1,093 உதவிப்பேராசிரியர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர். உதவிப் பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து ஓராண்டு தகுதி காண் பருவமாக (Probation Period) கருதப்படும்.

பணி நிலைப்பு சான்றிதழ் எங்கே? இந்தக் காலத்தில் அவர்களின் கல்விச்சான்றிதழ் சரிபார்ப்பு, கடந்த கால நடத்தைகள், பணித்திறமை ஆகியவை ஆய்வு செய்யப்படும். ஓராண்டு தகுதிகாண் பருவம் முடிவடைந்தவுடன், அவர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படும். இந்த நடைமுறைப்படி 2016ஆம் ஆண்டு ஜூலையில் அவர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், மொத்தம் 7 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் கூட, 1093 உதவிப் பேராசிரியர்களுக்கும் பணிநிலைப்புச்சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.

பணிநிலை உயர்வு, ஊதிய உயர்வு சாத்தியமாகுமா? கல்லூரி உதவிப்பேராசிரியர்களுக்கு பணி நிலைப்புச்சான்றிதழ் வழங்கப்படாதது அத்துடன் முடிந்து விடும் பிரச்னை இல்லை. பணி நிலைப்புச்சான்றிதழ் வழங்கப்படாததால், அதனடிப்படையில் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த உரிமையும் இன்று வரை வழங்கப்படவில்லை.

வழக்கமான தகுதிகளுடன் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேருபவர்களுக்கு 5ஆவது ஆண்டில் முதலாவது பணிநிலை மற்றும் ரூ.1000 தர ஊதிய உயர்வு வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 2ஆவது பணி நிலை உயர்வு மற்றும் ஊதிய உயர்வும், அடுத்த 3 ஆண்டுகளில், அதாவது 13ஆவது ஆண்டில் இணைப் பேராசிரியர் பதவி உயர்வும் வழங்கப்படும்.

ஆனால், இன்னும் பணி நிலைப்புச் சான்றிதழே வழங்கப்படாததால் இரு ஆண்டுகளுக்கு முன் கிடைத்திருக்க வேண்டிய பணிநிலை உயர்வு மற்றும் தர ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. அடுத்த 3 ஆண்டுகளில் 2ஆவது பணிநிலை உயர்வு மற்றும் தர ஊதிய உயர்வு கிடைக்குமா? என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

குளறுபடியில் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம்: கல்லூரிக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடக்கும் குளறுபடிகள் தான் அனைத்து தாமதத்திற்கும், அநீதிக்கும் காரணம் ஆகும். பணியில் சேர்ந்த உதவிப்பேராசிரியர்கள் தங்களது சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை நிரூபிப்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்து விட்டனர். ஆனால், பணியில் சேர்ந்த பிறகு உயிரிழந்த உதவிப்பேராசிரியர்கள், நியமிக்கப்பட்ட பிறகும் பணியில் சேராத உதவிப்பேராசிரியர்கள் ஆகியோரைப் பற்றிய விவரங்களையும் கல்லூரிகளிடமிருந்து இயக்குநர் அலுவலகம் கோருகிறது. இல்லாத உதவிப் பேராசிரியர்களின் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகங்கள் எவ்வாறு வழங்க முடியும்?

ஏமாற்றத்தில் உதவிப் பேராசிரியர்கள்: அதுமட்டுமின்றி, 2015ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர்கள் எவ்வளவு பேர்? பணியில் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர்? இப்போது பணியில் இல்லாதவர்கள் எவ்வளவு பேர்? என்பது குறித்த விவரங்கள் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இல்லை. இது தான் குழப்பங்களுக்குக் காரணம் ஆகும்.

கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் நினைத்தால், அனைத்து அரசு கல்லூரிகளில் இருந்தும் விவரங்களைப்பெற்று தணிக்கை செய்து இந்த சிக்கலுக்குத் தீர்வு காண முடியும். ஆனால், கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் இன்று வரை அதை செய்யவில்லை. இயக்குநர் அலுவலகத்தின் தவறுக்கு உதவிப்பேராசிரியர்கள் ஏன் பணிநிலை உயர்வையும், தர ஊதிய உயர்வையும் இழக்க வேண்டும்?

ஈடு செய்ய இயலாத இழப்பு: 2015ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பலர் கடந்த சில ஆண்டுகளில் ஓய்வுபெற்று விட்டனர். ஆனால், அவர்களுக்கு பணி நிலைப்புச்சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு உடனடியாக தீர்வு காணப்படவில்லை என்றால், அடுத்த சில ஆண்டுகளில் கிடைக்கவேண்டிய 2ஆவது பணி நிலை உயர்வையும், தர ஊதிய உயர்வையும் இழக்க வேண்டியிருக்கும். இது அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி விடக்கூடும்.

அரசு நடவடிக்கை தேவை: நிர்வாகத்தின் தரப்பில் நடந்த தவறுக்காக உதவிப்பேராசிரியர்கள் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்கக்கூடாது. எனவே, 2015ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அனைத்து உதவிப்பேராசிரியர்களுக்கும் உடனடியாக பணி நிலைப்புச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

அதனடிப்படையில், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிநிலை உயர்வையும், தர ஊதிய உயர்வையும் உரிய காலத்திலிருந்து கணக்கிட்டு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டி செலவு விவரங்களை யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம் - அமைச்சர் மெய்யநாதன்

Last Updated : Aug 16, 2022, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.