இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை தலைவர் ஜெயந்தி அறிவிப்பில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் போதிய அளவு மூன்று அடுக்கு முகக்கவசம், N95 முகக்கவசம், சானிடைசர் ஆகியவை உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தற்போது கரோனா தொற்றுக்கான ஆயிரத்து 514 முழு உடல் கவசம், 2 ஆயிரத்து 570 N95 முகக்கவசம், 28 ஆயிரத்து 870 மூன்று அடுக்கு முகக்கவசம், 86 ஆயிரத்து 600 கையுறைகள், 1 லட்சத்து 50 ஆயிரம் ஒருமுறை பயன்படுத்தும் கையுறை ஆகியவை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார், மருத்துவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதலமைச்சர் உத்தரவு