திமுக பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் மறைவைத் தொடர்ந்து அந்த பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் பதவிக்கு பொருளாளர் துரைமுருகன் போட்டியிட்டார். இதற்கான வேட்புமனுவை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் அவர் அளித்தார். பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட்டதால், அவர் வகித்த பொருளாளர் பதவிக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வேட்புமனுத் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்ரமணியன் உள்ளிட்டோருடன் சென்று அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகினர்.
இந்நிலையில், துரைமுருகன், டி.ஆர் .பாலுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் துரைமுருகனுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் டி.ஆர். பாலுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.
-
தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth) September 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth) September 3, 2020தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth) September 3, 2020
இதையும் படிங்க...’ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்க பணமில்லை’ - கலங்கி நிற்கும் குடும்பம்!