ETV Bharat / state

தென்னிந்திய மக்களிடம் உங்கள் பாட்’ஷா’ பலிக்காது: அமித் 'ஷா'வுக்கு ரஜினி பஞ்ச்!

தென்னிந்திய மக்களிடம் இந்தியை திணிக்க முடியாது என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

rajini on hindi imposition
author img

By

Published : Sep 18, 2019, 2:24 PM IST

இந்தியை பொது மொழியாக்க வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு ரஜினிகாந்த் எதிர் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக அரசு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணிக்க முயற்சித்துவருகிறது. இதற்கு சமூக செயற்பாட்டாளர்களும் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இந்தி திணிப்பு பற்றி ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பு குறித்து ரஜினி கருத்து

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொதுவான மொழி இருந்தால் நாடு வளர்ச்சியடையும், ஆனால் இந்தியாவுக்கு பொதுவான மொழி கிடையாது. இந்தி திணிப்பை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதிலும் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்கள் அதை நிச்சயம் ஏற்கமாட்டார்கள். இந்தி பேசாத மக்களிடம் இந்தியை திணிப்பதை வட மாநிலங்களும் கூட ஏற்காது என தெரிவித்துள்ளார்.

Intro:நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்Body:இந்தியை திணிக்க முயன்றால் தென் மாநிலங்களில் ஏற்க மாட்டார்கள் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் முன் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

பேனர் வைக்க கூடாது என்பதை தான் சொல்லி கொண்டு இருக்கிறேன். சுபஸ்ரீ வீட்டிற்கு இப்போதைக்கு செல்லும் வாய்ப்பு இல்லை.

நமது நாடு மட்டுமில்லாமல் எந்தவொரு நாடாக இருந்ததாலும் பொதுவான மொழி இருந்தால் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் நல்லது. துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் பொதுவான மொழியை கொண்டு வர முடியாது. ஆகவே எந்தவொரு மொழியையும் திணிக்க முடியாது. இந்தியை திணிக்க முயன்றால் தமிழ்நாடு மட்டுமின்றி தென் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் ஏற்க மாட்டார்கள். வட மாநிலங்களில் பல மாநிலங்களும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.