பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதியுள்ள ’புறநானூறு புதிய வரிசை வகை’ புத்தகத்தின் புத்தக வெளியிட்டு விழா சென்னை தி. நகரில் உள்ள வாணி மஹாலில் இன்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ரஜினிகாந்த், "காலம் எப்போதும் பேசாது; ஆனால் காலம் தான் பதில் சொல்லும். இளைய தலைமுறையினரின் கைகளில் சாலமன்பாப்பையா எழுதிய புறநானூறு புதிய வரிசை நூல் இருக்க வேண்டும். ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை; புறநானூறு புதிய வரிசை நூலை எழுதியதால் சாலமன் பாப்பையாவுக்கு பெருமை" என தெரிவித்தார்.