ETV Bharat / state

மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்: அஞ்சலி செலுத்திய பிறகு ரஜினிகாந்த் உருக்கம்!

உயிரிழந்த நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், அவரது கடைசி ஆசையை தான் நிறைவேற்றுவேன் என உருக்கமாக கூறினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 20, 2023, 10:42 AM IST

Updated : Feb 20, 2023, 12:57 PM IST

மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்: அஞ்சலி செலுத்திய பிறகு ரஜினிகாந்த் உருக்கம்!

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை மயில்சாமி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "மறைந்த மயில்சாமி எனக்கு 24 வயது முதல் தெரியும். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர், சிவனின் தீவிர பக்தர். அடிக்கடி நாங்கள் சந்திப்போம் என்று உருக்கமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "சினிமாவை பற்றி பேசவே மாட்டார். நான் சினிமா குறித்துக் கேட்டாலும் அவர் பேச மாட்டார். எம்.ஜி.ஆர் பற்றியும் சிவன் பற்றியும் தான் பேசுவார். நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அதிக படங்களில் நடிக்கவில்லை. திருவண்ணாமலை கூட்டத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். கார்த்திகை தீபத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக என்னிடம் பேசுவார்” என்றார்.

மேலும், "நடிகர் விவேக்கை போன்று சமூக அக்கறை கொண்ட மயில்சாமியின் மறைவு திரைத்துறைக்கு மட்டும் அல்ல, அவரது குடும்பம், நண்பர்களுக்கும் மட்டும் அல்ல, இந்த சமூகத்திற்கும் பேரிழப்பு" எனக் கூறினார். மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசை, குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, மயில்சாமியின் கடைசி ஆசை பற்றிக் கேள்விப்பட்டேன். அதை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும் ட்ரம்ஸ் மணியிடம் இதுகுறித்து பேச உள்ளேன் என்றும் பதிலளித்தார்.உயிரிழந்த நடிகர் மயில்சாமி, முன்னதாக ரஜினிகாந்த்தைச் சிவன் கோயிலுக்குச் சென்று பால் அபிஷேகம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மயில்சாமியின் மறைக்க முடியாத சில நினைவலைகள்

Last Updated : Feb 20, 2023, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.