சென்னை: ரஜினி ரசிகர்கள் திராவிட ஆட்சி ஒழிக... ஆன்மீக ஆட்சி வாழ்க என அவரை ஆதரித்து பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று (நவம்பர் 30) நடந்தது. இதற்காக காலை 9:30 மணியளவில் போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் இருந்து ரஜினி புறப்பட்டுச் சென்றார். ராகவேந்திரா மண்டபம் முன்பு ரஜினி ரசிகர்கள் 100க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தனர். அவரது ரசிகர்கள் திராவிட ஆட்சி ஒழிக, ஆன்மீக ஆட்சி வாழ்க என அவரை ஆதரித்து பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
இந்தக் கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, "மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பு நடந்தது, அவர்களுடைய கருத்துகளை சொன்னார்கள். நான் என்னுடைய பார்வையை பகிர்ந்து கொண்டேன். என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரத்தில் சொல்ல முடியமோ சொல்லுவேன்" என தெரிவித்தார்.