ETV Bharat / state

‘மாணவர்களை இழிவுபடுத்திய ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்’ - இந்திய மாணவர் சங்கம்!

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களை இழிவாகப் பேசிய ரஜினிகாந்த், மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

SFI press meet
செய்தியாளர்களை சந்தித்த மாணவர் சங்கம்
author img

By

Published : Dec 22, 2019, 6:29 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களை இழிவாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வீட்டை முற்றுகையிடுவோம் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களை பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த நடிகர்கள் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வருவதை கண்டிக்கிறோம். நடிகர் ரஜினிகாந்த் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்தினைக் கூறியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த மாணவர் சங்க பிரதிநிதிகள்

அதேபோல் ஒய்.ஜி.மகேந்திரன், மாணவர்கள் விடுமுறைக்காகவும் பெண்களை சைட் அடிப்பதற்காகவும் போராட்டம் நடத்துகின்றனர் என கொச்சைப்படுத்தியுள்ளார். இவர்கள் இருவரும் பகிரங்கமாக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம்.

மேலும், மாணவர்களை இழிவுபடுத்திய ரஜினிகாந்த், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்கள் வீட்டை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். மத்திய, மாநில அரசின் செயல்களால் எங்களின் போராட்டத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம்: ரஜினிகாந்த் கருத்துக்கு அமைச்சரின் பதில்!

Intro:நடிகர் ரஜினி, ஓய்ஜி மகேந்திரன்
மன்னிப்பு கேட்க வேண்டும்

Body:நடிகர் ரஜினி, ஓய்ஜி மகேந்திரன்
மன்னிப்பு கேட்க வேண்டும்
சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்களை இழிவாக பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஒய் ஜி மகேந்திரன் மன்னிப்பு கேட்காவிட்டால் வீட்டை முற்றுகையிடுவோம் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்களை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்த நடிகர்கள் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வருவதை கண்டிக்கிறோம்.

நடிகர் ரஜினிகாந்த் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்தினை கூறியுள்ளார். அதேபோல் ஒய்ஜி மகேந்திரன் மாணவர்கள் விடுமுறைகாகவும், பெண்களை சைட் அடிப்பதற்காக போராட்டம் நடத்துகின்றனர் என கொச்சைப்படுத்தி உள்ளார். இவர்கள் இருவரும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில் புகார் அளிக்க உள்ளோம்.

ரஜினிகாந்த் மற்றும் ஒய்.ஜி. மகேந்திரன் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்கள் வீட்டை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். மத்திய மாநில அரசின் செயல்களால் எங்களின் போராட்டத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்.

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. விடுமுறை முடிந்து மீண்டும் திறந்தவுடன் போராட்டம் நடத்துவோம். குடியுரிமை திருத்த சட்டத்தை ஐந்து மாநில முதலமைச்சர்கள் ஏற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். தமிழக முதல்வரும் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.