ETV Bharat / state

வரும் செப்.4ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் பேரணி நடக்கும்... ராஜிவ் கவுடா - விலைவாசி உயர்வு

டெல்லியில் செப்டம்பர் 4ஆம் தேதி விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சி துறை தலைவர் ராஜீவ் கவுடா தெரிவித்துள்ளார்.

Etv Bharat ராஜீவ் கவுடா
Etv Bharat ராஜீவ் கவுடா
author img

By

Published : Aug 29, 2022, 5:51 PM IST

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் ராஜிவ் கவுடா சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நாட்டில் விலைவாசி உயர்வு வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவை பெரும் பிரச்னையாக உள்ளன. இவற்றை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதி தலைநகர் டெல்லியில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற உள்ளது.

2014ஆம் ஆண்டு லிட்டருக்கு ரூபாய் 71ஆக இருந்த பெட்ரோல் விலை 2022ஆம் ஆண்டு லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டி விற்பனையாகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விலை 40 விழுக்காட்டுக்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று, மே 2014 அன்று கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 140 டாலர்கள் என்று விற்பனையானது. இருந்தபோதிலும் எங்கள் ஆட்சியில் 70 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கப்பட்டது.

ஆனால், மோடி ஆட்சியில் 40 டாலர்களுக்கு கச்சா எண்ணெய் கிடைத்தபோதிலும் பெட்ரோல் விலையைக் குறைக்கவில்லை. ஏழைகள் பயன்படுத்தும் உணவு தானியங்கள், தயிர், மோர் போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக கடந்த 2019ஆம் ஆண்டு வாக்காளர்களிடம் பிரதமர் மோடி பெருமையாக கூறினார். ஆனால், சாமானிய மக்கள் பயன்படுத்தும் அந்த பொருட்களுக்கு இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளனர்.

பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு காங்கிரஸ் காலத்தில் வாங்கிய ஆயில் பாண்டுகள் தான் காரணம் என்று தொடர்ந்து இந்த அரசாங்கம் எங்கள் மீது குற்றம் சுமத்திவருகின்றனர். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் வாங்கப்பட்ட ஆயில் பாண்டுகள் மீதான பணத்தை நாங்கள் திருப்பிச்செலுத்திவிட்டோம். பெட்ரோலியப்பொருள்கள் விலை உயர்வால் உணவு தானியங்கள் விலை உயர்கின்றது.

இந்த அரசாங்கம் சாமானிய மக்களைப் பற்றி என்றுமே கவலைப்படுவதில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரி விலக்கு சலுகைகள் அளிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். மத்திய அரசினுடைய பொருளாதார ஆலோசகராக இருந்த கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம் நாட்டில் விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என்று கூறினார். ஆனால், இந்த ஆட்சியில் பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மக்களுக்கு இந்தப் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால், அவர்கள் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். மக்களின் கண்களைத் திறப்பதற்காக இந்த யாத்திரை நடைபெற உள்ளது. மதக்கலவரங்கள், பிரிவினை வாதம் உள்ளிட்டவைக்காக மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை நிச்சயம் இந்த யாத்திரை மூலம் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

அது மட்டும் இல்லாமல் அத்வானி நடத்திய ரத யாத்திரையுடன் நாங்கள் நடத்தும் யாத்திரையை ஒப்பிட வேண்டாம். அத்வானி நடத்திய யாத்திரை ரத யாத்திரை இல்லை, அது ரத்த யாத்திரை. பிரிவினை வாதத்தின் மூலம் மக்களைப்பிரித்து அவர்கள் ஆட்சி அமைப்பதற்காக நடைபெற்ற யாத்திரை அது.

ஆனால், இந்த யாத்திரையானது நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைப்பதற்காக நடைபெறும் யாத்திரை. வரும் செப்டம்பர் 4ஆம் தேதி டெல்லியில் இந்த மாபெரும் மக்கள் பேரணி நடைபெறும். அன்றைய தினமே இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்துவார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: காங்கிரஸில் இருந்து வெளியேறும் கட்டாய நிலைக்குத்தள்ளப்பட்டேன்... குலாம் நபி ஆசாத் பேட்டி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.