சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி இது குறித்து கூறும்போது, ”ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் 2,500க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 150க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, நந்தம்பாக்கம் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தும் மையங்களில் பணிபுரிந்து வந்த மூன்று மருத்துவர்கள் உள்பட மருத்துவப் பணியாளர்கள் 31 பேருக்கு கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.