ETV Bharat / state

ராஜபாளையம், ராமேஸ்வரம்: கரிம மாசு இல்லாத நகராட்சியாக உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன் - ராஜபாளையம் ராமேஸ்வரம்

ராஜபாளையம் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சிகளை கரிம மாசு இல்லாத நகராட்சிகளாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

claimate change
காலநிலை
author img

By

Published : Apr 13, 2023, 10:14 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையில் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார்.

அவை வருமாறு:

*காலநிலை மன்றங்கள், வழக்கமான மன்ற செயல்பாடுகளுடன் இயங்குவதுடன் கலந்துரையாடல், அமர்வு, பரிசோதனை அடிப்படையில் கற்றுணர்தல், வினாடி வினா போட்டிகள் ஆகியவை நிகழ்த்தப்படும்.

* நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் காடு உருவாக்கப்படும்

* கால நிலைக்கேற்ற வாழ்வியல் முறை என்ற திட்டம் ரூ.50 லட்சம் செலவில் தமிழ்நாடு அரசால் நடைமுறைப்படுத்தப்படும்.

* பசுமை நகரக் குறியீடு ரூ. 3 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

* காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் மற்றும் தீர்வுகளுக்கு நிதி உதவி, ரூ.10 கோடி மதிப்பீட்டில் பசுமை நிதி உருவாக்கப்படும்.

* ராஜபாளையம் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சிகளை கரிம மாசு இல்லாத நகராட்சிகளாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பசுமை பள்ளிக்கூடத் திட்டம் 2023-24 ஆம் ஆண்டில் ரூ.10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மேலும் 50 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

* முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கும் திட்டம், ரூ.1 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

* தமிழ்நாடு குறுங்காடுகள் திட்டம் - காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக நாட்டு மரங்கள் கொண்ட ஆயிரம் குறுங்காடுகள் உருவாக்கப்படும்.

* சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் அமைக்கப்படும்.

* கழிவு உற்பத்தியாளர் மற்றும் பயனர்களுக்கு இடையே கழிவுகளை பரிமாறிக் கொள்வதற்கு இணையவழி கழிவு பரிமாற்றத் தலம் அமைக்கப்படும்.

* சுழற்சி பொருளாதாரத்தில் குப்பை சேகரிப்பவர்களின் பங்களிப்பினை முதன்மைப்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ரூ.1 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

* கடல்வாழ் பல் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில், பயன்படுத்தி தூக்கி எறியப்படும் மீன்பிடி வலைகளை சேகரித்து மறு சுழற்சிக்கு அனுப்புவதற்கான திட்டம் ரூ.1 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

* மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களுக்கு ஆய்வுகளுக்கான தேசிய அங்கீகார வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரூ.3 கோடி செலவில் அங்கீகாரம் பெறப்படும்.

* தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 8 மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களில் நுண்ணுயிர் பகுப்பாய்வு பிரிவு ரூ. 4 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

* தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாசினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மண் தரம் வரைபடம் ரூ.3 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும்.

இதையும் படிங்க: பல் பிடுங்கிய விவகாரம்.. காத்தாடிய விசாரணை கமிஷன்... மீண்டும் 2 நாட்கள் விசாரணை என அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.