அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, 'உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நான் மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்திய நாட்டின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் மத பேதமின்றி ஒன்றிணைந்துப் பாடுபடவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
இதையும் படிங்க: