இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நடைபெற்று முடிந்துள்ள மக்களவைத் தேர்தலிலும், 18 சட்டப்பேரவை இடைதேர்தலிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். வர இருக்கின்ற நான்கு சட்டப்பேரவை இடைதேர்தலிலும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க, அந்த தொகுதிகளில் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கின்றேன். அதனை திமுக தலைவர் ஸ்டாலினிடம் தெரிவித்தேன்.
திராவிடர் கழக தலைவர் வீரமணி கிருஷ்ணர் பற்றி அவதூறாக பேசியது அவர் நம்பிக்கை பொறுத்தது ஆகும். என்னை பொறுத்தவரை கிருஷ்ணர் மேல் நம்பிக்கை உள்ளது. திமுக கொள்கை இறைவன் இருக்கின்றான் என்பதுதான். தமிழ்நாட்டில் மத பிரச்னைகள் வைத்து அரசியல் செய்ய முடியாது " என்றார்.
தொடர்ந்து பேசியவர், "பாஜக ஐந்து இடங்களிலும் படுதோல்வி அடையும். அதிமுக யாரை வேட்பாளர்களாக அறிவித்தாலும் தோல்வி உறுதி. அவர்கள் ஓட்டை நம்பி இல்லை. நோட்டை நம்புகின்றனர் " என தெரிவித்தார்.