இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவிட்19 பெருந்தொற்றின் காரணமாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் சுதந்திர தினத்தின்போது அளிக்கப்படும் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது.
காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் தமிழ்நாடு ஆளுநரின் உடல் நிலையை இன்று (ஆகஸ்ட் 3) பரிசோதித்தனர். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். தொடர்ந்து 24 மணி நேரமும் ஆளுநரின் உடல்நிலையை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த 84 பாதுகாப்பு வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் அனைரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், 38 நபர்களுக்கு ஆளுநர் மாளிகையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 35 நபர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
ஆளுநரின் உதவியாளர் உள்பட 3 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை 7 நாள் தனிமைப்படுத்தி கொண்டு இருந்தார்.
இதன்பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ குழுவினரால் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 2.6 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு!