ETV Bharat / state

சென்னையில் மழைநீர் சேகரிப்புக்கிணறுகளுக்கு வரவேற்பு குறைவு... காரணம் என்னவாக இருக்கும்? - சென்னை குடிநீர் வாரியம்

இந்த ஆண்டு சென்னையில் மழைநீர் சேகரிப்புக்கிணறுகள் அமைப்பது குறித்த அறிவிப்புக்கு வரவேற்பு குறைந்துள்ளதாக மழைநீர் சேகரிப்பு நிறுவனத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மழைநீர் சேகரிப்பு கிணறுகளுக்கு வரவேற்பு குறைவு

author img

By

Published : Jun 28, 2022, 4:10 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதியில் கோடைகாலத்தில் வழக்கமாக ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பொதுமக்களுக்குத் தேவையான தண்ணீர், மெட்ரோ வாட்டர் லாரிகள் மூலம் அதிக அளவில் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மழைநீர் சேகரிப்புக்கிணறுகள் அமைப்பது குறித்த அறிவிப்புக்கு, வரவேற்பு என்பது சென்னைவாசிகள் மத்தியில் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மழைநீர் சேகரிப்பு மையத்தின் உறுப்பினர்கள் கூறும்போது, கடந்த ஆண்டுகளில் சென்னையில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போகும்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். இதனைச் சரிசெய்ய சென்னை மாநகரில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற கட்டாய நிலைமை ஏற்பட்டது.

எனவே, கடந்த 2003ஆம் ஆண்டில் மழை நீரை வீணாகாமல் இருக்க 'மழை நீர் சேகரிப்பு' என்ற திட்டம்' மழை சேகரிப்பு' என்ற மையத்தால் முன்மொழியப்பட்டு நகரங்களில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், மழைநீர் தேங்கும் இடங்களில் மழை நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இது ஒரு நல்ல முடிவை தந்தது என்கிறார்கள், நீரியல் நிபுணர்கள்.

மழைநீர் தொட்டி அமைக்க உதவும் தன்னார்வ அமைப்புகள்: இதுகுறித்து மழை சேகரிப்பு மையத்தின் நிறுவனர் சேகர் ராகவன், கூறும்போது, "இந்த ஆண்டின் தொடக்கத்தில் எங்களது மையம் விப்ரோ (Wipro Limited) என்ற கம்பெனியுடன் கைகோர்த்து சென்னையில் 40 மழைநீர் சேகரிப்புக் கிணறுகளை அமைக்க ஒப்பந்தம் செய்தது. அதன்படி கிணறுகளை அமைக்க விரும்பும் குடியிருப்புவாசிகள் 50 விழுக்காடு பணம் கொடுக்க வேண்டும்.

மீதமுள்ள 50 விழுக்காடு பணத்தை விப்ரோ நிறுவனம் செலுத்தும். இதனிடையே இந்தத் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ரோட்டரி கிளப்பும் முன்வந்தது. இதனால் குடியிருப்போர் 50 விழுக்காடு பணத்தைக் கூட செலுத்தாமல் இலவசமாக மழைநீர் கிணறுகளைப் பெறலாம்", என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ''அனைத்து மெட்ரோ ஏரிகளிலும் இந்த ஆண்டு நீர் இருப்பு இருந்ததால், மெட்ரோ வாட்டர் லாரிகள் மூலம் தண்ணீர் அதிக அளவில் விநியோகிக்கப்பட்டன. இதனால் நிலத்தடி நீரை யாரும் விரும்பவில்லை. எனவே நிலத்தடி நீர் மட்டமும் குறையவில்லை", என்ற அவர் மழைநீர் கிணறுகளை அமைக்க ஐந்து அல்லது ஆறு அடி அளவுக்கு குழி தோண்டும் போது நீரூற்று போல தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் மக்கள் மழைநீர் கிணறுகள் அமைக்க விரும்புவதில்லை'' என்ற ராகவன் இதுவரை 12 மழைநீர் கிணறுகள்தான் அமைத்துள்ளோம் எனக் குறிப்பிட்டார்.

சென்னையில் மழைநீர் சேகரிப்பு கிணறுகளுக்கு வரவேற்பு குறைவு
சென்னையில் மழைநீர் சேகரிப்புக்கிணறுகளுக்கு வரவேற்பு குறைவு...

இதையடுத்து சென்னை குடிநீர் வாரியத்தின் அலுவலர் ஒருவர் பேசும்போது, “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டமானது சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது. எனினும், காலப்போக்கில் இந்த திட்டத்தை சென்னைவாசிகள் கைவிட்ட நிலையில், சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைத்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் 'ஒலி மாசு விழிப்புணர்வு வாரம்' - தொடங்கி வைத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.